என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பி வெங்கட்ராம ரெட்டி
நீங்கள் தேடியது "பி வெங்கட்ராம ரெட்டி"
தமிழில் வீரம், பைரவா படத்தை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் பி.வெங்கட்ராம ரெட்டி இன்று மதியம் காலமானார்.
விஜயா வாகினி புரொடக்ஷன்ஸ் பி.நாகிரெட்டி அவர்களின் இளைய மகன் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் பி.வெங்கட்ராம ரெட்டி அவர்கள் இன்று மதியம் 1 மணியளவில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 75. அவரது மனைவி பெயர் பி.பாரதிரெட்டி. இவருக்கு ராஜேஷ் ரெட்டி என்ற மகனும், ஆராதனா ரெட்டி, அர்ச்சனா ரெட்டி என்று இரு மகள்களும் உள்ளனர்.
பி.வெங்கட்ராம ரெட்டி தமிழில் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம், பைரவா ஆகிய 5 படங்களை தயாரித்துள்ளார். இவரது 6வது படமான சங்கத்தமிழன் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது இறுதி அஞ்சலி நெசப்பாக்கத்தில் நாளை காலை 7.30 முதல் 9 மணி வரை நடைபெற்று தகனம் செய்யப்பட இருக்கிறது.
×

X